Wednesday, 2 October 2013

வரும் 2014 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு

 
திருவாரூர்  மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கான புதிய வரைவு வாக்காளர் பட்டியல் 1/10/2013 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 8,92,785 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் ஆட்சியர் சி. நடராசன்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன் னிலம் சடட்ப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அவர் மேலும் பேசியது:

2013, ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி மாவட்டத்தில், 4,48 ,920 ஆண் வாக்காளர்கள், 4,42,764 பெண் வாக்காளர்கள், 7 திருநங்கை வாக்காளர்கள் என மொத்தம் 8,91,691 வாக்காளர்கள் இருந்தனர். பின்னர் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் 2,950 ஆண், 2,148 பெண் வாக்காளர்கள் என 5,098 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

1,511 ஆண், 2,493 பெண் என 4,004 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி திருவாரூர் மாவட்டத்தில் 8,92,785 வாக்காளர்கள் உள்ளனர். இதில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் 2,07,299, மன்னார்குடி தொகுதியில் 2,19,679, திருவாரூர் தொகுதியில் 2,29,133, நன்னிலம் 2,36,674 என மொத்தம் 8,92,785 வாக்கா ளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் 18 வயது முதல் 19 வயதுடைய 5,938 பேரும், 20 வயது முதல் 24 வயதுடைய 68,504 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.மாலா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

No comments:

Post a Comment