திருவாரூர் மாவட்டத்தில் கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015-16 நிதியாண்டில் மாவட்டத்தில் 160 கோழிப்பண்ணைகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 250 கோழிக் குஞ்சுகள் கொண்ட பண்ணை அமைக்க மொத்த திட்ட மதிப்பீடு ரூ.1,29,500 ஆகும். வங்கி மூலம் கடன் பெற்று பண்ணை தொடங்குபவர்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ. 32,375, பண்ணையை தொடாóந்து நடத்துவோருக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000, பண்ணையை பாதியில் விட்டுவிடாமல் நடத்துவோருக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.32,370 என ரூ.69,750 மானியமாக வழங்கப்பட உள்ளது.
வங்கிக் கடன் பெறாமல் சுயநிதியில் கட்டடம் கட்டி பண்ணை நடத்துபவாóகள் இத்திட்டத்தில் தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டால் அவாóகளுக்கு மாநில அரசால் வழங்கப்படும் மானியம் ரூ.37,375 வழங்கப்படும். கோழிப்பண்ணை நடத்த கொட்டகை அமைக்கும்போது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அங்கீகரித்த வடிவமைப்பில் இருக்க வேண்டும்.
அரசு நியமிக்கும் ஒருங்கிணைப்பாளார் மூலம் நாட்டுக்கோழிப் பண்ணை தொழில் தொடங்குவோருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். கிராம ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். ஏற்கெனவே சிறிய அளவில் இத்தொழில் செய்வோருக்கு அபிவிருத்தி செய்யும் நோக்கில் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
திட்டத்தில் பயனடைய விரும்புவோர் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலைய கால்நடை மருத்துவாகளை அணுகவும், வங்கிக்கடன் பெற தங்கள் பகுதி வங்கி மேலாளாóகளை அணுகலாம்.
No comments:
Post a Comment