Monday, 1 June 2015

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு!









 தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45 ஆயிரத்து 366 உள்ளன. இந்த பள்ளிகளில் 87,68,231 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கத்தினால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி, கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய மாணவ-மாணவிகள், மகிழ்ச்சி குறைந்து சற்று சோக முகத்துடனே இன்று பள்ளிகளுக்கு வந்தனர்.

மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுகள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்களை அந்தந்த பள்ளிகளின் இன்று வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது.

No comments:

Post a Comment