தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர நிகழ் கல்வியாண்டுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இந்தாண்டு 2,655 இடங்களாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட 100 இடங்கள் கூடுதலாகும். மருத்துவ கல்வி இயக்குநர் கீதாலட்சுமி ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.
முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
சிறப்புப் பிரிவினருக்கு விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ராணு வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு வரும் 19-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 20-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினர் உள்பட அனைத்து சமுதாயப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். வரும் 25-ஆம் தேதியன்று முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடையும்.
மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment