Monday 22 June 2015

"எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் 0.35% பேர் மட்டுமே'


பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, எரிவாயுவுக்கான மானியத்தை 0.35 சதவீதம் பேர் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
 தில்லியில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கடந்த வாரம் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாட்டில் எரிவாயு உருளைக்காக மானியத் தொகை பெறும் 15 கோடி நுகர்வோர்களில் 5.5 லட்சம் பேர் மட்டுமே தாங்களாக முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரிடமும் மானியத்தை விட்டுக் கொடுக்க வலியுறுத்தியும் பலர் இன்னும் விட்டுக் கொடுக்கவில்லை.
 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்பட சில அமைச்சர்களும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் எரிவாயு உருளைக்காக அளிக்கப்படும் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 கடந்த மார்ச் மாதம், எரிவாயு உருளைக்காக அளிக்கப்படும் மானியத்தை வசதி உள்ளவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment