Saturday, 20 June 2015

"செல்வமகள்' சேமிப்புக் கணக்குத் திட்டம்: தமிழகம் முன்னிலை


நாட்டிலேயே செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் தமிழகம் முன்னிலையில் இருந்துவருவதாக தலைமை அஞ்சலக இயக்குநர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும், மத்திய அரசால் "செல்வமகள்' (சுகன்யா சம்ரித்தி) சேமிப்புக் கணக்கு என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். தமிழகத்தில் அஞ்சல் துறை வாயிலாக செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் என்ற பெயரில் இந்தத் திட்டம் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாதத்தில், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகையால், செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் தொடங்க வருபவர்களின் வசதிக்காக, மார்ச் 22, 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் இயங்கும் என, அஞ்சல் துறையால் அறிவிக்கும் அளவுக்கு, நாளுக்கு நாள் அஞ்சலகங்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஞ்சலக இயக்குநர் சார்லஸ் கூறுகையில், தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. மின்னணு வணிகத்திலும் அமேசான், ஸ்நாப் டீலுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் எஸ்.ஆர்.எம் டிராவல்சுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் பஸ் டிக்கட்டுகளை கணினிமயமாக்கப்பட்ட 2 ஆயிரத்து 580 அஞ்சல் நிலையங்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment