ரமலான் விழாவுக்கு தமிழக அரசு வழங்கும் நோன்புக் கஞ்சி அரிசி இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும் என்றார் மனிதநேய மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜவாஹிருல்லா.
திருவாரூரில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: ரமலான் நோன்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கவுள்ள நிலையில், இதுவரை தமிழக அரசு நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கவில்லை. நோன்பு கஞ்சிக்கு வழங்கும் அரிசியின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.டெல்டா விவசாயிகள் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கக்கூட மத்திய அரசு தயங்குகிறது. ராமநாதபுரம் எஸ்.பி. பட்டினத்தில் சையது முகமது என்பவர் காவல் ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து சிசிஐடி மற்றும் மாஜிஸ்திரேட்டு அறிக்கை தாக்கல் செய்தும் இதுவரை ஆய்வாளர் காளிதாஸ் கைது செய்யப்படவில்லை. விரைவில் அவரைக் கைது செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் ஜவாஹிருல்லா.
No comments:
Post a Comment