பாஸ்போர்ட் பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, கல்வி, மருத்து வம், சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளிநாடு செல்கின்றர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.
பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிப்பவர்களிடம் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு விண்ணப் பிக்கும்போது ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட் டால் அதுகுறித்த காரணத்தை சம்மந்தப்பட்ட விண்ணப்ப தாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப் பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப் பிப்பவர்களில் நாள்தோறும் 2 ஆயிரத்து 550 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலர் நாங்கள் கேட்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் விண்ணப்பிக்கின்றனர். அல்லது விண்ணப்பத்தைத் தவறாக பூர்த்தி செய்கின்றனர்.
மேலும், எங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் விண்ணப்பத்தை சரியான முறையில் பரிசீலனை செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு பாஸ்போர்ட்டை உரிய நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு சரியான தகவல் கிடைக்காததால் அவர்கள் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண்பதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தவர்களை தொடர்புகொண்டு அவர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் என்ன காரணத்துக்காக தாமதமாகிறது என்ற காரணத்தைத் தெரிவிப்பார். மேலும் எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் தயார் செய்து வழங்கப்படும் என்ற விவரத்தையும் கூறுவார்.
இதன் மூலம், சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேவையின்றி எங்கள் அலுவலகத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 18002581800, 28513640, 28518848, 28513639, 28513641, 28513575 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
No comments:
Post a Comment