திருவாரூர் மாவட்டத்தில்ஆக. 4-6 வரையிலான3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் பட்டவர்த்தி, சுந்தரபெருமாள் கோவில், வடசங்கேந்தி, தூக்கணாங்குருவி ஆகிய இடங்களில் சேதமடைந்துள்ள குழாய்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால், திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி மற்றும் முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட ஒன்றியப் பகுதிகளில் ஆக. 4 முதல் 6-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது.

No comments:
Post a Comment