திருவாரூர்,
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு உள்ளதாக கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை
திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலமாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள், ஏ.சி டெக்னீசியன்கள் மற்றும் 10–ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பெண்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் போன்ற பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு தமிழக அரசு நிறுவன அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி, அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம், உணவு, மருத்துவ காப்புறுதி, மிகைநேர பணி ஊதியம் ஆகியவை வெளிநாட்டு வேலை அளிப்போரால் வழங்கப்படும். மேற்கூறிய காலியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன, கல்வி, அனுபவம், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பாஸ்போர்ட் மற்றும் அனைத்து அசல் கல்விச்சான்றுடன், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாக எண்: 42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை – 600032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் அறிய 044–22505886, 22502267 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவோ அல்லது என்ற ‘‘www.omcmanpwer.com’’ இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment