Monday, 5 January 2015

விரைவில் ஆதார் எண்களுடன் வாக்காளர் அட்டை இணைப்பு பணி


தமிழகத்தில் ஆதார் எண்கள் அடிப்படையில், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தேர்தல் துறை தொடங்க உள்ளது.
ஆதார் எண்களை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. ஆதார் அட்டை எண்ணில் போலி இடம் பெற முடியாதென்பதால், வாக்கா ளர் புகைப்பட அடையாள அட்டை யுடன், அந்த எண்ணை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, புதுடெல்லி யில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாநில தேர்தல் அதிகாரி கள் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது. தமிழகம் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இக்கூட்டத்தில் பங்கேற் றார்.
இதுகுறித்து தேர்தல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றும் போலி வாக்காளர்களை முழுமை யாக நீக்க முடியவில்லை. இதைத் தடுக்க, நாட்டிலேயே முதல் முதலாக ஆந்திரம் மற்றும் தெலங் கானாவில் ஆதார் எண்களுடன், வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைத்துத் தகவல் களைத் தொகுக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆந்திராவில் ஆதார் பணிகள் முடியும் நிலை யில் உள்ளதால், அங்கு சோதனை முயற்சியாக இத்திட்டம் அக்டோபரில் தொடங்கப்பட் டுள்ளது. வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் விவரங்களை இணை யம் மூலம் தெரிவிப்பதற்கும், கால் சென்டர் மூலம் தெரிவிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அங்கு கிடைக்கும் முடிவு களைக் கொண்டு மற்ற மாநிலங்க ளிலும் அது விரைவில் அமல் படுத்தப்படவுள்ளது.
இது குறித்து விவாதிக்க, புது டெல்லியில் நடைபெற்ற கூட்டத் தில், மாநில தலைமை தேர்தல் அதி காரிகளுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கியுள்ளார்.
இதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள், மாநிலத்தில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் பற்றியும் கூட்டத்தில் விளக்கப் பட்டுள்ளது.
விரைவில் தமிழகம்
தமிழகத்தில் 4.9 கோடி பேருக்கு ஆதார் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகை 7.2 கோடி. தமிழகத்தில் ஆதார் எண்களுடன், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை விவரங்களை இணைத்து புதிய டேட்டாபேஸ் விரைவில் தயாரிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் இப்பணி குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் கள் மற்றும் தேர்தல் அதிகாரி களுடன் விரைவில் ஆலோசனை நடக்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சுருக்க முறை வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியின் போது இப்பணிகள் முழுவீச்சில் செயல் படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment