Wednesday, 14 January 2015

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க திருவாரூர் ஆட்சியர் வலியுறுத்தல



சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கும், மக்கா குப்பைகளை சேகரிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை
தொடக்கிவைத்து அவர் பேசியது:
போகிப் பண்டிகையைக் கொண்டாட தேவையற்ற கழிவுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீயிட்டு எரிப்பதால் வெளியாகும் டையாக்சின், பியூரான் வாயுவால்
மிகவும் ஆபத்தான நச்சுப் பொருட்கள் உருவாகி, புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், உடல் மற்றும் சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்துகிறது. எனவே, தேவையற்ற
கழிவுகளை எரிக்கவோ, தெருக்களில் வீசியெறியவோ வேண்டாம். தேவையற்ற கழிவுகள் மற்றும் பொருட்கள் பேரூராட்சிப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.
கழிவுப் பொருள்களை மறுபயன்பாட்டுக்கு உரியவை, மறுசுழற்சிக்கு உரியவை, மக்கக்கூடியவை, மறுசுழற்சி அற்றவை என தரம்பிரித்து மக்கள் வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்த்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்றார் ஆட்சியர். பேரூராட்சி உதவி இயக்குநர் மணி, பேரூராட்சித் தலைவர் ராணி, வட்டாட்சியர்

No comments:

Post a Comment