Thursday 1 January 2015

திட்ட கமிஷனுக்கு மாற்றாக 'நீதி ஆயோக்' அமைப்பு உதயம்




திட்டக்குழு தொடர்பாக டெல்லியில் நடந்த மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி| கோப்புப் படம்: பி.டி.ஐ.
திட்ட கமிஷனுக்கு மாற்றாக 'நீதி ஆயோக்' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
திட்டக் குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற மூன்று வாரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல் சுதந்திர தின உரையின் போது பேசிய பிரதமர் மோடி, 64 ஆண்டுகால திட்ட கமிஷன் கலைத்துவிட்டு இன்றைய காலத்துக்கு ஏற்ற புதிய நிதி அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
இதன் அடிப்படையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 7-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சில மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பல் வேறு துறை சார்ந்த நிபுணர் களைக் கொண்டதாக பிரதமர் தலைமையில் புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை கூறப்பட்டது.
மாநில முதல்வர்களை சுழற்சி முறையில் புதிய அமைப்பில் இடம்பெறச் செய்வது குறித்தும், ஒதுக்கும் நிதியை தேவைக்கேற்ப சுதந்திரமாக செலவழிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.
பெரும்பாலான முதல்வர்கள் திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கு வதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்று மூன்று வார காலங்களுக்குப் பின்னர் திட்ட கமிஷன் அமைப்புக்கு மாற்றாக நீதி ஆயோக் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment