கர்நாடகம் காவிரியில் புதிய அணைக்கட்ட அனுமதிக்கமாட்டோம் என் று மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன்.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசி யது: நீண்ட காலமாக தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ள காவிரியில் கர்நாடகம் புதிய அணைக்கட்டும் போக்கினை உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசு காவிரி கண் காணிப்புக் குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டு ம், காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டுமென்பதுடன், கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படவில் லை. நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக பொது ரகத்துக்கு ரூ. 1,450, சன்னரகத்துக் கு ரூ. 1,470 அறிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கை நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டுமென்பதாகும். எனவே தமிழக அரசு நெல்லுக்கான ஆதார விலையை உய ர்த்த வேண்டும். மேலும் தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அதிகமாக திறக்க வேண்டும்.
கரும்பு டன்னுக்கு ரூ. 2,650 என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருப்பது விவசாயிக ளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசுகள் கரும்புக்கான ஆதார விலைய கூடுதலாக அ றிவிக்க வேண்டும். மேலும் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ள ரூ. 400 கோடியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீத்தேன் எரிவாயு திட்டம் அபாயகரமானது. திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சாவூர், தி ருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும். நீர், நிலவளம் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களுக்கு தீங்கு விளை விக்கும் கொடிய நோய்கள் வரும். எனவே மீத்தேன் திட்டத்தை உடனடியாக கைவிட்டு, அரசுகள் இதற்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
நடப்பு சம்பா பயிரில் புகையான் தாக்குதல் அதிகமாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிகழாண்டு மகசூல் குறையும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தமிழகஅரசு மதுக்கடைகள் மீது காட்டும் அக்கறையை நியாயவிலைக் கடைகள் மீது காட்ட வேண்டும். மக்களுக்கு சாதாரணப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொ ள்ள வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மாவட்டத்தில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்க வேண் டும். உறுப்பினர் சேர்க்கையின் போது கட்சி நிர்வாகிகள் உள்ளூர் பிரச்னைகளை கையில் எ டுத்துக்கொண்டு தமாக பிரச்னைக்கு தீர்வு காணும் என்று மக்களிடம் நம்பிக்கையை ஏற்படு த்த வேண்டும்.
தஞ்சாவூர்-திருவாரூர் நான்கு வழிச்சாலைத் திட்டம், திருவாரூரில் புதியப் பேருந்து நிலை யம், திருவாரூர் அரைவட்ட சுற்றுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திருவா ரூரிலிருந்து சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி அகல ரயில்பாதைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
அரசின் எளிமையான நடைமுறைக்கு, வெளிப்படையான நிர்வாகத்துக்கு அனைத்துத்துறை களிலும் பொருளாதார வளர்ச்சிக்கு தமாகவில் உறுப்பினர்களாக சேருங்கள் என்றும், தேர்த ல் காலக்கட்டங்களில் வாக்களியுங்கள் என்று நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றார் வாசன்.
ஜி.ஆர். மூப்பனார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் எம்பிக்கள் பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவை தங்கம், சி. ஞானசேகரன், மாவட்ட பொறுப்பாளர் குடவாசல் எஸ். தினகரன் மற்றும் நிர்வாகிகள் டி.ஏ.பி. செந்தில்பாண்டியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment