குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேர்க்கைக்கான குழந்தைகளை தேர்வு செய்யும் பணி கடந்த மே மாதம் 31-ந் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் சேர்க்கைக்கு வராததால் நிலுவையாக உள்ள காலி இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு துறை சார்ந்த பிரதிநிதி முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எனவே, ஏற்கனவே இணைய வழியாக விண்ணப்பித்து சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர் நாளை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று காலியாக உள்ள இடத்தில் தங்கள் குழந்தையை சேர்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment