Sunday 13 April 2014

கம்பன் ரயில் பெட்டியில் புகை: திருவாரூரிலிருந்து 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டது

கம்பன் விரைவு ரயில் பெட்டியில் புகை வந்ததால் திருவாரூரிலிருந்து 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னையிலிருந்து காரைக்கால் வரை செல்லும் (வேளாங்கண்ணி இணைப்பு ரயில்) கம்ப ன் விரைவு ரயில் வழக்கமாக திருவாரூர் ரயில் நிலையத்துக்கு காலை 6 மணிக்கு வந்து என்ஜினை மாற்றிக் கொண்டு 6.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். நாகப்பட்டிணத்தில் வே ளாங்கண்ணி இணைப்பு ரயில் தனியாக பிரிந்து வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு கம் பன் விரைவுரயில் வந்தது. அப்போது என்ஜினை மாற்றிக்கொண்டு காரைக்கால் புறப்படும் போது என்ஜினிலிருந்து 2-வதாக இருந்த குளிர்சாதனப் பெட்டியின் பிரேக் பகுதியிலிருந்து புகை வந்தது ரயில் நிலைய அலுவலர்களால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு ரயில்வே தொழில்நுட்பப் பணியாளர்கள் வந் து குளிர்சாதனப் பெட்டி பிரேக் பகுதி சரிபார்க்கப்பட்டு புகை வருவது நிறுத்தப்பட்டது. இத னால் 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது

No comments:

Post a Comment