Sunday 6 April 2014

வேட்பாளர்கள் சொத்து பட்டியல்


 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
2.
சொத்து விவரம்

தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயனுக்கு ரூ.10 லட்சத்து 8 ஆயிரத்து 412 மதிப்பில் நகை, ரொக்கம், வங்கி கணக்கு ஆகிய அசையும் சொத்துகளும், அவரது மனைவி ஜோதிமணிக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்து 5ஆயிரத்து 407 மதிப்பில் அசையும் சொத்துகளும் உள்ளன. மேலும் குடும்ப உறவினர் வகையில் ரூ.16 ஆயிரத்து 620 வங்கி கணக்கில் உள்ளது.
 
இது தவிர ஏ.கே.எஸ்.விஜயனுக்கு ரூ.15 லட்சத்திலும், மனைவி ஜோதிமணிக்கு ரூ.95 லட்சத்து 60 ஆயிரத்திலும், குடும்ப உறவினர் வகையில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்திலும் அசையாத சொத்துக்கள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 440 ஆகும். இந்த தகவல்கள் அவரது வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.




3.சொத்து விவரம்

நாகை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பழனிச்சாமி தனது வேட்புமனுவில், வங்கி கணக்கு, கையிருப்பு ஆகிய அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 631 எனவும், அவருடைய மனைவி சாரதா பெயரில் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார். தனது அசையா சொத்துகளின் மதிப்பாக ரூ.25 லட்சம் என தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பழனிச்சாமி, மனைவி சாரதாவுக்கு ரூ. 1½ லட்சம் மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சத்து 22 ஆயிரத்து 631 என வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.






4.சொத்து மதிப்பு

நாகை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் செந்தில்பாண்டியன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது பெயரில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.35 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


5.சொத்து மதிப்பு

வேட்பு மனுவில் தனக்கு ரூ. 1 லட்சத்து 500 மதிப்பிலும், தனது மனைவி சுசிலாவுக்கு ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 771 மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி சுசிலா பெயரில் ரூ. 6 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாகவும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணன் கூறி உள்ளார். மொத்த சொத்து மதிப்பு ரூ. 12 லட்சத்து 83 ஆயிரத்து 771 என்று வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment