Sunday 3 February 2019

அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்படும் - மத்திய அரசு தகவல்

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நினைவாக நேற்று சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இதை மத்திய தொலைத்தொடர்புத்துறை இணை மந்திரி மனோஜ் சின்கா வெளியிட்டு பேசினார். அப்போது அவர், அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்படும் எனக்கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பாஸ்போர்ட்டுக்காக யாரும் 50 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லக்கூடாது என்பது பிரதமர் மோடியின் விருப்பம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி ஏராளமான தொகுதிகளில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், மீதமுள்ள தொகுதிகளிலும் இந்த மாத இறுதிக்குள் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு வரை 77 பாஸ்போர்ட் மையங்கள் இருந்ததாக கூறிய மனோஜ் சின்கா, தற்போது 300-க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.


No comments:

Post a Comment