Friday, 1 February 2019

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்: தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருது ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து பேசினார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* வருமான வரித்துறையை மக்கள் எளிதில் அணுகும் முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3.79 கோடியில் இருந்து 6.68 கோடியாக அதிகரித்து உள்ளது. 99.54 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர். 

* வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியில் இருந்து 12 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. 

* நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும்  அந்தத் துறை அறிவிப்பின் போது அறிவிக்கப்படவில்லை. பின்னர்  உறுப்பினர்களின் கைத்தட்டலுடன்  இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என பியூஸ் கோயல் அறிவித்தார்.

No comments:

Post a Comment