9 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சி செய்தி சேனல்கள் வெளியிட்டு வருகின்றன.
சி.என்.என். - ஐ.பி.என். கருத்துக் கணிப்பு முடிவுகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 39 தொகுதிகளில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 22-ல் இருந்து 28 இடங்களைக் கைப்பற்றும் என்று சி.என்.என். - ஐ.பி.என். சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி 7-ல் இருந்து 11 இடங்களிலும், தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 4-ல் இருந்து 6 இடங்களையும் கைப்பற்றும் என அந்தக் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. தனித்துப் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் ஒரு இடத்தை கூட வெல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக 39 சதவீத வாக்குகளையும், திமுக கூட்டணி 26 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 16 சதவீத வாக்குகளையும் பெறும் என்று சி.என்.என். - ஐ.பி.என். கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகள்
இதனிடையே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், அதிமுக 31 இடங்களைக் கைப்பற்றும் என்றும், திமுக கூட்டணி 7 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பாஜக கூட்டணி ஓர் இடத்தில்கூட வெல்லாது என்றும், காங்கிரஸ் ஓர் இடத்தைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - அட்டவணையில்:
சி.என்.என். - ஐ.பி.என்:
அதிமுக: 22 - 28
திமுக கூட்டணி: 7 - 11
பாஜக கூட்டணி: 4 - 6
காங்கிரஸ் - 0
டைம்ஸ் நவ்:
அதிமுக - 31
திமுக கூட்டணி - 7
காங்கிரஸ் - 1
பாஜக - 0
தந்தி டிவி
அதிமுக 24-29
திமுக கூட்டணி 5
பாஜக கூட்டணி 4 - 6
இதில்
நாகை ,தஞ்சை ,மயிலாடுதுறை உள்ளிட மற்ற அனைத்து தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்றும்
மத்திய சென்னை ,வேலூர் ,ஸ்ரீபெரும்புத்தூர் ,நெல்லை ,திருவண்ணாமலை உள்ளிட தொகுதியில் திமுக வும் ,
கன்னியாகுமரி ,தருமபுரி ,விருதுநகர்,கோவை ,தென்காசி, புதுச்சேரி உள்ளிட தொகுதியில் பாஜக கூட்டணியும் வெற்றி பெரும் என்று கருத்து கணிப்பை தந்தி டிவி வெளியிட்டது .
அதிமுக 24-29
திமுக கூட்டணி 5
பாஜக கூட்டணி 4 - 6
இதில்
நாகை ,தஞ்சை ,மயிலாடுதுறை உள்ளிட மற்ற அனைத்து தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்றும்
மத்திய சென்னை ,வேலூர் ,ஸ்ரீபெரும்புத்தூர் ,நெல்லை ,திருவண்ணாமலை உள்ளிட தொகுதியில் திமுக வும் ,
கன்னியாகுமரி ,தருமபுரி ,விருதுநகர்,கோவை ,தென்காசி, புதுச்சேரி உள்ளிட தொகுதியில் பாஜக கூட்டணியும் வெற்றி பெரும் என்று கருத்து கணிப்பை தந்தி டிவி வெளியிட்டது .
No comments:
Post a Comment