Thursday 1 May 2014

ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகள் குறித்து தகவல் அளிக்கலாம்: திருவாரூர் ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், மூடாமல் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தோண்டப்பட்டு மூடாத, பயன்பாடற்ற திறந்த நிலையில் உள்ள தனியார் மற்றும் அரசு துறைகளுக்குச் சொந்தமான ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் குறித்து விவரம் சேகரிக்கவும், அவ்வாறான கிணறுகள் கண்டறியப்பட்டால் அவற்றில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க மே 7-ம் தேதி முகாம் நாளாக நடத்தப்படுகிறது.

முகாம் தினத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் துறை சார்ந்த அலுவலர்களை முழுமையாக ஈடுபடுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து கிணறுகள் இருந்தால் அவற்றை மூட வேண்டும். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். விபத்து நேரிடும் காலங்களில் 1077-ஐ தொடர்புகொள்ளலாம். உடனடியாக மூடவேண்டிய ஆழ்குழாய் கிணறுகள் குறித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண்ணில் (04366 221003) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment