Friday 9 May 2014

திருவாரூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 83.7 % - பிளஸ் 2 தேர்வு முடிவு


திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 83.7 சதவீத ம் தேர்ச்சிப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 65 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 14 அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 3 சுயநிதி மேல்நிலைப்பள்ளிகள், 19 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 101 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் 2013-2014 ம் கல்வியாண்டில் மொத்தம் உள்ள 14,080 மாணவர்களில் 14,004 மாணவர்கள் தேர்வெழுதினர்.

தேர்வெழுதிய 14,004 பேரில் 4,483 மாணவர்கள், 7,239 மாணவிகள் என 11,722 மாண வர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களில் 77.91, மாணவிகளில் 87.74 தேர்ச்சி சதவீ தம் என மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 83.7 ஆகும்.
பெண்களின் தேர்ச்சி சதவீதம் அதிகம்: நிகழாண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாணவர்களைவிட 10 சதவீதம் தேர்ச்சி மாணவிகளே அதிகம் பெற்றுள்ளனர். மாண வர்களைப் பொருத்த வகையில் கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சி சதவீதத்திலிருந்து சற்று குறைந்துள்ளது. பெண்களில் 2 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது பிளஸ்-2 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 82.53 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. நிகழாண்டின் தேர்ச்சி சதவீதம் 83.7 ஆக உள்ளதால் மொத்தம் 1 சதவீதம் மட்டுமே ஒராண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

இருபள்ளிகள் மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி: மாவட்டத்திலுள்ள 65 அரசு மேல்நிலைப்ப ள்ளிகளில் திருமக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல் நிலைப்பள்ளி ஆகிய இருபள்ளிகள் மட்டும் 100 சதவீத தேர்ச்சிப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் மாவட்ட 
முதல் மூன்று இடம் பெற்றவர்கள் விபரம் :

1 முர்சிதா நஸ்ருன் -  திருவாரூர் GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளி
     (அடியக்கமங்கலம் ஹாஜா அலாவுதீன் - ராபியா பானு மகள் )
மதிப்பெண் விபரம்

தமிழ்                                192

ஆங்கிலம்                       188

பொருளியல்                     200

வணிகவியல்                    200

கணக்குப்பதிவியல்         200

வணிக கணிதம்                 197
                                               
                                                  1177


பெரும் போராட்டம் நடத்தி இறைவன் அருளால் முதல் மாணவியை உலகுக்கு அறிமுகம் செய்தோம் இன்று

                                 மாஷா அல்லாஹ்





2 ஐஸ்வர்யா - 1175 - திருவாரூர் GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளி


3 மணிவேலு - 1173 - மன்னார்குடி


3 ஷெர்வின் - 1173 - திருத்துறை பூண்டி


No comments:

Post a Comment