Wednesday, 7 May 2014

திருவாரூரில் 2-வது நாளாக மழை






திருவாரூரில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
கத்தரி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 5 மணி முதல் பரவலாக மழை பெய்தது.
திங்கள்கிழமை மதியத்துக்குப் பிறகு மழை நின்றுவிட்டாலும், தொடர்ந்து லேசான குளிர்ந்த காற்று வீசியவாறு இருந்தது. நள்ளிரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை விட்டுவிட்டு மழை பெய்தது.
முத்துப்பேட்டையில் 58 மிமீ: திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை

காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

முத்துப்பேட்டை - 58, திருத்துறைப்பூண்டி - 24, திருவாரூர் - 23, நன்னிலம் - 20.2, குடவாசல் - 16, வலங்கைமான் - 12.3, பாண்டவையாறு தலைப்பு - 9.6, நீடாமங்கலம் - 6.2, மன்னார்குடி 6.

No comments:

Post a Comment