Friday, 16 May 2014

நாகை அதிமுக வேட்பாளர் கே. கோபால் 1,06,079 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி




நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்ட ர் கே. கோபால் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ் விஜயன் பெற்ற வாக்குகளைவிட கூடு தலாக 1,06,079 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றார்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் டாக்டர் கே. கோபால் (அதிமுக), ஏ.கே. எஸ். விஜயன் (திமுக), பி. செந்தில்பாண்டியன் (காங்கிரஸ்), கோ. பழனிச்சாமி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எஸ். வடிவேல்ராவணன் (பாமக), வே. தங்கசாமி (பகுஜன் சமாஜ்) மற்றும் சுயேட்சைகள் ஜி. தேவகி, கி.
முருகையன், க. மோகன் ஆகிய 9 பேர் போட்டியிட்டனர்.

தொகுதிக்குள்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம், கீவளூர், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் 1,425 வாக்குச்சாவடிகளில் பதி வான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூர் திருவிக அரசுக் கலைக் கல் லூரியில் தொகுதிவாரியாக தனித்தனி அறைகளில் மத்தியத்தொழிலக பாதுகாப்புபடை, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என 3 அடுக்குப் பாதுகாப்பில் பாதுகாக் கப்பட்டது.
இத்தொகுதியில் மொத்தமுள்ள 12,09,925 வாக்காளர்களில், 9,39,400 வாக்காளர்கள் ம ட்டுமே வாக்களித்து, சதவீதத்தில் 77.64 ஆக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.இந்நிலை யில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணியை ஆ ட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடராசன் தொடக்கிவைத்தார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அந்தந்த பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட அறைகளில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் பணித் தொடங்கியது.

முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் கோபால் 25,540, திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 19,332, இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோ. பழனிச்சாமி 6,190, காங்கிரஸ் வேட்பாளர் பி. செந்தில்பாண்டியன் 1,222, பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் 2,578, பகுஜன் சமாஜ் வேட்பாளர் வே. தங்கசாமி 94, சுயேட்சைகள் ஜி. தேவகி 96, கே. முருகையன் 46, மோகன் 105 வாக்குகள் பெற்றிருந்தனர்.

தேர்தலில் பிரதானப் போட்டியாக அதிமுக, திமுவுக்குமே இருந்தது. வாக்கு எண்ணிக் கையில் முதல் சுற்றையடுத்து அடுத்தடுத்த சுற்றுகளிலிருந்தே அதிமுக வேட்பாளர் கே. கோபால் 6000 த்திலிருந்து வாக்குகளிலிருந்து 8,000, 12,210 வாக்குகள் என கூடு தலாகவே பெற்று வந்தார். 4-வது சுற்றில் 25,847, 5-வது சுற்றில் 35,087, 6-வது சுற்றில் 40,601 என வாக்குகள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

தொடக்கத்திலிருந்து அதிமுக அதிக வாக்குகளை பெற்று வந்ததால் வெற்றி உறுதியா னது என்று அக்கட்சியினர் பெருமிதம் கொண்டனர். 3 முறை தொகுதியை தக்கவைத் துக்கொண்ட திமுகவினர், திமுகவின் வாக்குகள் அதிகரிக்காததை அறிந்து முகவாட்ட த்துடன் காணப்பட்டனர்.
இறுதியாக 21 சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் கே. கோபால் 4,34,174 வாக்குகள் பெற்று, இவருக்கு அடுத்தப்படியாக வந்த திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் பெற்ற 3,28,095 வாக்குகளை விட கூடுதலாக 1,06.079 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

நாகைத் தொகுதியில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கோ. பழனிச்சாமி 90,313, காங்கிரஸ் வேட்பாளர் பி. செந்தில்பாண்டியன் 23,967, பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் 43,506, பகுஜன் சமாஜ் வேட்பாளர் வே. தங்கசாமி 1,851, சுயேட்சைகள் ஜி. தேவகி 1,847, கே. முருகையன் 1,033, ஜி. மோகன் 1754 வாக்குகள் பெற்றனர். அனைத்துத் தொகுதிகளில் 15,662 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கே. கோபாலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சி. நடராசன் வெற்றிச் சான்றிதழ் வழங்கினார்.

No comments:

Post a Comment