Tuesday 13 May 2014

வாக்கு எண்ணிக்கை விவரம் முகவர்களுக்கு பிரதியாக வழங்கப்படும்'

வாக்குப்பதிவு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்று முடிவுகளின் விவரங்களின் பிரதி அரசியல் கட்சி முகவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றார் ஆட்சியரும், நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடராசன்.

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான மாதிரி எண்ணிக்கை பயிற்சியைத் தொடங்கிவைத்து அவர் பேசியது:

நாகை (தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் திருவாரூர் திருவிக கல்லூரியில் மே 16-ம் தேதி எண்ணப்படுகிறது.

ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை விவரங்கள், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளரால் அதற்குரிய படிவங்களில் பூர்த்தி செய்யப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களிடம் கையெழுத்துப் பெற்று தொடர்புடைய பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கப்படும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஒவ்வொரு சுற்றிலும் 14 மேஜைகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும், நாகை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பதிவான வாக்கு விவரங்கள், வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரங்கள் தொகுக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும். முகவர்களுக்கு உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை விவரங்களை பிரதி எடுத்து வழங்க தேவையான நகலெடுக்கும் இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை விவரங்களை தொகுக்க கணினி வசதி ஆகியவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வாக்கு எண்ணிக்கை அறைகளில் ஏற்பாடு செய்யப்படும் என்றார் நடராசன்

வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு வேட்பாளர் 95 முகவர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடராசன்.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர் களின் முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கூட்டத்துக்கு தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
நாகை மக்களவைத் தொகுதி வாக்குகள் திருவாரூர் திருவிக அரசுக் கல்லூரியில் மே 16-ல் எண்ணப்படுகின்றன. தொகுதிக்குள்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதா ரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பேரவைத் தொகுதிகளு க்கு அமைக்கப்பட்டுள்ள அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
பதிவான தபால் ஓட்டு எண்ணிக்கை கல்லூரியின் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கு அருகிலுள்ள அறையில், 4 மேஜைகள் அமைக்கப்பட்டு அதற்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும்.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெறும். ஒரு சுற்றுக்கு 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
அதற்காக ஒரு மேஜைக்கு ஒருவர் வீதம் 14 மேஜைகளுக்கும் ஒரு முகவர், அந்தந்த பேரவைத் தொகுதிக்கு என ஒரு முகவர், தபால் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மேஜைக்கு ஒரு முகவர் வீதம் 4 மேஜைகளுக்கு 4 முகவர்கள், ஒரு தலைமை முகவர் என ஒரு வேட்பாளருக்கு மொத்தம் 95 முகவர்கள் நியமிக்கலாம்.
எனவே, அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தங்களின் முகவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் (மே 11) வழங்க வேண்டும்.
ஒவ்வொரு சுற்றுக்கும், வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் வேட்பாளர்களின் முகவர்களுக்கு பிரதிகள் எடுத்து உடனுக்குடன் வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே செல்போன், கேமரா, இங்க்பேனா, உள்ளிட்ட பொருட்கள் எதையும் எடுத்துவர கூடாது. வாக்கு எண்ணிக்கையை கணக்கிட கால்குலேட்டர் மட்டும் எடுத்து வரலாம் என்றார் நடராசன்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) ஷியாம்சுந்தர், (பொது) கி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment