திருவாரூரில் புதன்கிழமை மாலையிலிருந்து இடைவிடாமல் இரவு மு ழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் அதிகப்பட்சமாக குடவாசலில் 102.4 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலைக் காரணமாக கத்தரிவெயி ல் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) முதல் மாவட்டத்தில் மழைப் பெய்யத் தொடங்கி யது. இதனால் கடுமையான வெயின் தாக்கத்திருந்த மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சிய டைந்தனர். அத்துடன் வறண்ட பூமியும், வளரும் கோடைப் பயிர்கள் மட்டுமின்றி மரம் செ டி, கொடிகளும் பயன்பெற்று வருகிறது.
இந்நிலையில், ஏப்.5-ம் தேதி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த 80.80 மில்லி மீட்ட ரில் சராசரி 8.98 மி.மீ மழையும், ஏப்.6-ல் பெய்த 139 மில்லி மீ்ட்டரில் சராசரி 19.52 மி.மீ மழையும், ஏப்.7-ல் பெய்த 180.30 மில்லி மீட்டர் மழையில் சராசரி 20.03 மில்லி மீ்ட்டர் ம ழைப் பதிவாகியுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக பெய்த மழையின் அளவைவிட, 4-வது நாளான புதன்கிழமை மா லை 5.45 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து வியாழக் கிழமை காலை 10 மணி வரையும் சிறிது நேர இடைவெளி விட்டு மழைப் பெய்துக்கொண் டிருந்தது. சிறிது நேர வெயில், சிறிது நேர மழை மேகம், அடுத்த மழையை பார்த்து மகிழ் ச்சியடைந்து வருகின்றனர் திருவாரூர் மாவட்ட மக்களும், விவசாயிகளும்.
No comments:
Post a Comment