Tuesday 24 March 2015

திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி


               
திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதார் அட்டை

திருவாரூர் மாவட்ட கலெக் டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பு பதிவேட்டினை அடிப்படையாக கொண்டு ஆதார் அட்டைக்கு புகைப் படம் எடுத்தல், உடற்கூறு பதிவு செய்தல் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணிக் காக திருவாரூர் மாவட்டத் தில் திருவாரூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஆகிய தாசில்தார் அலுவலகங்களி லும், திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத் துறைப் பூண்டி ஆகிய 4 நகராட்சி அலுவலகங்களிலும் நிரந்தர மையங்கள் அமைக்கப் பட்டுள் ளன. திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளம் அறை எண். 47-லும் நிரந்தர மையம் செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் கிராமங்கள் மற்றும் தாலுகா தலைமை இடங்களில் நடத்தப்பட்ட முதல் சுற்று மற்றும் 2-ம் சுற்று முகாம்களில் உடற்கூறு பதிவு செய்யாதவர்கள், புகைப்படம் எடுக்காதவர்கள் நிரந்தர மையங்களில் அதை செய்து கொள்ளலாம்.

எடுத்து செல்ல வேண்டியவை

நிரந்தர மையங் களுக்கு குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, கடவு சீட்டு (பாஸ்போர்ட்), 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ரசீது நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

ஆதார் அட்டை பணி களுக்காக தாலுகா அளவில் துணை தாசில்தார்கள், நக ராட்சி அலுவலகங்களில் அலுவலக மேலாளர் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு செயலாக்க திட்டம் தனி துணை கலெக்டர் ஆகியோர் தொடர்பு அதிகாரிகளாக நிய மனம் செய்யப்பட் டுள் ளனர். அரசின் அனைத்து திட்டங் களுக்கும் ஆதார் அட்டை இன்றியமையாத ஆவணமாக பயன்படுத்தப்படு வதால் இதுவரை ஆதார் அட்டைக்கு பதிவு செய்யா தவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண் டும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment