Wednesday 11 March 2015

சென்னை பேருந்து தேவை அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிய தனிக் குழு


சென்னையில் பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கும் வகையில், தேவை அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிய தனி அதிகாரிகள் குழுவை அமைத்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளுக்கு "கட் சர்வீஸ்' பேருந்து சேவையை அதிகரித்திருப்பதோடு, முக்கிய இடங்களுக்கு பேருந்து சேவை எண்ணிக்கையையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் அதிகரித்துள்ளது. இதில் "கட் சர்வீஸ்' பேருந்துகள் அதிகரித்திருப்பது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம் கூட்டு ரோடு பகுதிக்குச் செல்ல முன்னர் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது பேருந்து சேவை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. பேருந்து தேவை அதிகம் உள்ள பகுதிகளை அறிய நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, தனி அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளோம்.

இதுபோல், பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதைக் கண்காணிப்பதற்கும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு முக்கியப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பயணிகள், பல்வேறு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்

No comments:

Post a Comment