Thursday 12 March 2015

திருவாரூர் மருத்துவகல்லூரி


திருவாரூர் அரசு மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையளிக்கப்பட்டது.

திருவாரூர் அருகே தீபங்குடியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (57). மஞ்சள் காமாலை மற்றும் வயிற்று வலி காரணமாக பிப்.4-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சந்திரசேகரன், ஆனந்த், முருகதாஸ், மயக்கவியல் பேராசிரியர் சந்திரசேகரன், மருந்துவர் ராஜா, செவிலியர் சாந்தி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் பாராட்டினார். இதையடுத்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த செல்வராஜ் மார்ச் 1-ம் தேதி அன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை என்றார் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம்.

No comments:

Post a Comment