Friday 27 March 2015

ரூ.500 கோடி வரிபாக்கி வைத்துள்ள 18 நிறுவனங்களின் பெயர் பட்டியல் வெளியீடு மத்திய நேரடி வரி வாரியம் முதல் முறையாக நடவடிக்கை

                 

ரூ.500 கோடி வரிபாக்கி வைத்துள்ள 18 நிறுவனங்களின் பெயர் பட்டியலை முதல் முறையாக மத்திய நேரடி வரி வாரியம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


தீவிர நடவடிக்கை


இந்தியா முழுவதும் பெரிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இந்த பாக்கியை மத்திய நேரடி வரி வாரியம் வசூலித்து வருகிறது.


இதில் மொத்தம் ரூ.500 கோடி வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள 18 நிறுவனங்களின் பெயர் பட்டியலை முதல் முறையாக, மத்திய நேரடி வரி வாரியம், இணையதளத்தில் வெளியிட்டது. இதில் 11 நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் செயல்படுபவை ஆகும்.


இதுகுறித்து வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரூ.10 கோடி மற்றும் அதற்குமேல் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களிடம் இருந்து வரியை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பல நிறுவனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்காக அவர்களின் ‘பான் நம்பர்’ (நிரந்தர கணக்கு எண்) மற்றும் பழைய முகவரிகளை வெளியிட்டுள்ளோம். அந்த நிறுவனங்கள் குறித்து தெரிந்தவர்கள் விவரம் தெரிவிக்கலாம்’ என்றார்.

வெளியீடு


இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சில நிறுவனங்களின் பெயர் மற்றும் வரி பாக்கி தொகை விவரம் வருமாறு:–


கோல்டுசுக் டிரேட் இந்தியா, ஜெய்ப்பூர் ரூ.75.47 கோடி, புளூ இன்பர்மேஷன் டெக்னாலஜி ரூ.75.121 கோடி, சோம்னி சிமெண்டு ரூ.27.47 கோடி, ஆப்பிள்டெக் சொல்யூஷன்ஸ் ரூ.27.07 கோடி.


ஜூபிடர் பிசினஸ் ரூ.21.31 கோடி, ஹிராக் பயோடெக் ரூ.18.54 கோடி மற்றும் 12 நிறுவனங்களின் பெயர்களும், வரிபாக்கி தொகையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment