Tuesday, 30 December 2014

சாலையை சீரமைக்கக் கோரி கிடாரம்கொண்டானில் மக்கள் மறியல்


திருவாரூர் அருகேயுள்ள கிடாரம்கொண்டானில் மிக மோசமான நிலையில் உள்ள திருவாரூர்-நாகை சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
கிடாரம்கொண்டான் பகுதியில் திருவாரூர்-நாகை சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால், அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பலர் காயமடைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கிடாராம்கொண்டான் பகுதியில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த திருவாரூர் டிஎஸ்பி மதுரசாமி, வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பழுதடைந்த சாலையை தா ற்காலிகமாக சீரமைக்கவும், மழை நின்றதும் நிரந்தரமாக பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன்பேரில், மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மறியலால்ல அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment