முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கில் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள/ஆதரவளிக்க லைக் பட்டனும், கருத்துகளை பகிர்வதற்கு ஷேர் பட்டன் மற்றும் அவரவர் கருத்துகளை பதிவு செய்ய கமெண்ட் பட்டனும் இருக்கிறது. ஆனால் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதை தெரிவிக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை.
இப்போது 'டிஸ்லைக்' பட்டனை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யப்போவதாக பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.
கருத்துகளை எதிர்ப்பதற்கோ, அல்லது துக்கத்தை தெரிவிப்பதற்கோ வாய்ப்பு இல்லை, இதுபோன்ற சமயத்தில் பயனாளர்கள் தங்களது கருத்துகளை, உணர்வுகளை பகிர்ந்துகொள்ள வழி இல்லை. டிஸ்லைக் பட்டன் கொண்டுவரும் பட்சத்தில் இதற்கு வசதியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த கேள்வி பதில் உரையாடலில் இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment