Sunday, 28 December 2014

மதுவிலக்கு குற்றங்களில் பிடிபட்ட வாகனங்கள் திருவாரூரில் டிசம்பர் 30-ல் ஏலம்


திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பிடிபட்ட இருசக்கர வாகனங்கள் வரும் 30-ம் தேதி ஏலம் விடப்படவுள்ளது.
இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனார்கலிபேகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரால் மதுவிலக்கு சோதனையின்போது பல்வேறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமு தல் செய்யப்பட்ட வாகனங்கள் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் டிச. 30-ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04366-225270 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment