சிங்கப்பூரின் தேசிய சிறப்புகளைக் கூறுகின்ற பாடல் ஒன்றினை தமிழில் இயற்றி, இசையமைத்து வெளியிட்டுள்ளனர் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஐவர். தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டில் பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான தமிழர்களும் பரவலாக வாழ்ந்து வருவதால் சிங்கப்பூர் அரசின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது. விடுதலை பெற்ற சிங்கப்பூர்: இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்த சிங்கப்பூர் 1963 ஆம் ஆண்டு அந்நாட்டிடம் இருந்து விடுதலை பெற்று தனிநாடாக மாறியது. 50 ஆவது சுதந்திர தினம்: இந்த ஆண்டு தங்களது 50 ஆவது சுதந்திர தின விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தனிப்பெருமை கூறும் தேசியப்பாடல்: இந்நிலையில், சிங்கப்பூரின் வரலாற்று பெருமையையும், தனிச்சிறப்பு மிக்க பாரம்பரியத்தையும் விளக்கும் நாட்டுப்பற்று பாடல் ஒன்றை தமிழில் இயற்றி, அதற்கு இசையமைக்கும் முயற்சியில் சிங்கப்பூர் தமிழரான லோகப்பிரியன் ரங்கநாதன் களமிறங்கினார். 50 ஆயிரம் டாலர் ஊக்கத் தொகை: இந்த முயற்சிக்கு 50 ஆயிரம் டாலர்களை நிதியாக வழங்கிய அரசு அவரை ஊக்கப்படுத்தியது. பறைசாற்றப்பட்ட தாய்நாட்டுப் பற்று: இதனையடுத்து, அந்நாட்டின் இசை, நடனம் மற்றும் பாரம்பரிய சிறப்புகளை விளக்கும் பாடலை இயற்றி, இசையமைத்து, பாடி, ஒலிப்பதிவு செய்து அதை 19 நடனக் குழுவினர் மற்றும் இசைக்கலைஞர்களை வைத்து வீடியோ பதிவாகவும் வெளியிட்டு லோகப்பிரியன் ரங்கநாதன் தலைமையிலான ஐவர் குழு தங்களது தாய்நாட்டுப் பற்றை பறை சாற்றியுள்ளது.
No comments:
Post a Comment