திருவாரூர் நகர்மன்ற அவசரக்கூட்டம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைப்பெற்றது .இதில் மனுநீதி சோழன் மணிமண்டபம் பனகல் சாலையில் இருக்கும் சோமசுந்தரம் பூங்காவில் ரூ1.10 கோடியில் தமிழக அரசு முலமாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.நகரிலுள்ள அனைத்துச் சாலைகளும் சீரமைக்கப்படும். நகரில் உள்ள பூங்காக்கள் புதுப்பொலிவு பெறும். திருவாரூர் பனகல் சாலையிலுள்ள சோமசுந்தரம் பூங்கா வளாகத்துக்குள் 247.5 சதுர மீட்டர் அளவில் மனுநீதிச் சோழனுக்கு மணிமண்டபம் கட்ட நகராட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு ரூ. 1.10 கோடி நிதி வழங்கியுள்ளது. இந்தப் பணி 3 மாதங்களில் நிறைவு பெறும். மணிமண்டபத்தில் மனுநீதிச்சோழன் குறித்த வரலாறு கல்வெட்டுகளாகவும், ஓவியமாகவும் தீட்டப்படும். மணிமண்டபம் கட்டும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும் என்றார் அவர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:
வரதராஜன் (சுயேச்சை): திருவாரூரில் தெருவிளக்குகளை பொது-தனியார் கூட்டாண்மை முறையில் பொருத்தி பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில், பராமரிப்புப் பணியில் தொய்வு ஏற்படவும், பணிகள் சரிவர நடைபெறாமலும் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, பணி மேற்கொள்ளப்போகும் தனியாரிடம் அதற்கான உத்திரவாதத்தை எழுத்து மூலம் பெற்று அதன்பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும்.
மடப்புரம் சம்பத் (காங்கிரஸ்): முனிசிபல் பேட்டையில் உள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். வார்டு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகாலை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
செந்தில் (துணைத் தலைவர்): நகராட்சியிலுள்ள 30 வார்டுகளிலும் கூட்டு துப்புரவுப் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ஜெயமணி (திமுக): சாலைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
ராமு (திமுக): புதை சாக்கடை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் துர்நாற்றம் மக்களை பாதிக்கச்செய்கிறது. எனவே, நீரேற்று நிலையம் உள்ள பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். கடந்த 10 கூட்டங்களாக இதுகுறித்து தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஜாகீர்உசேன் (காங்கிரஸ்): 8-வது வார்டு நடுத்தெரு, தெற்குத்தெரு இணைப்புச்சாலை டெண்டர் விடப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதேபோல, கொடிக்கால்பாளையம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க டெண்டர் விடப்பட்டும் பணிகள் தொடங்கவில்லை.
No comments:
Post a Comment