Sunday, 21 December 2014

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம்




பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் சிறிய மாற்றம் செய்து அரசு தேர்வுகள்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணையை அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அதில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய அட்டவணைப்படி, மார்ச் 24-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மொழிப்பாடம் 2-ம் தாள் தேர்வு, மார்ச் 20-ம் தேதியே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment