Monday, 9 May 2016

திருவாரூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் பன்னீர்செல்வம் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பு














திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்¢செல்வம் வீடு-வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

வீடு, வீடாக வாக்குசேகரிப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் மக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் திருவாரூர் நகரில் வீடு-வீடாக சென்று அ.தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்றது. அனைத்து தரப்பினரும் பயன் பெற்றிடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. கல்வியில் புரட்சி செய்தார். மாணவர்களின் திறனை மேம்படுத்திட மடிக்கணினி வழங்கப்பட்டது.

மணிமண்டபம்

திருவாரூரில் மனுநீதி சோழனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. திருவாரூர் தொகுதி முன்னேற்றம் அடைந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் நகர செயலாளர் மூர்த்தி, நகரசபை தலைவர் ரவிச்சந்திரன், விவசாய அணி பொருளாளர் சூரியசாமி, நகரசபை உறுப்பினர் குருசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment