Friday, 6 May 2016

திருவாரூரில் மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

திருவாரூரில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
2016 பேரவைத் தேர்தல் மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்துப் பணிகளையும் தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மத்திய பாதுகாப்புப் படையினர் 420 பேர் திருவாரூருக்கு வியாழக்கிழமை வந்தனர். இவர்கள் இங்கிருந்து 4 பேரவைத் தொகுதிகளுக்கு 4 குழுக்களாகப் பிரித்து அனுப்பப்பட்டனர். வியாழக்கிழமை அந்தந்த தொகுதியில் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
தியாகராஜர் கோயில் ஆரூரான் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து பனகல் சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட் சாலை, நேதாஜி சாலை, தெற்குவீதி வழியாக மீண்டும் ஆரூரான் திருமண மண்டபத்துக்குச் சென்றனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தரசு தலைமையில் நடைபெற்ற பேரணியில் டிஎஸ்பி சுகுமாறன், நகரக் காவல் ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment