Wednesday, 4 May 2016

தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருவாரூரில், தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் டி.என். வெங்கடேஷ் தலைமை வகித்து பேசியது:
பேரவைத் தேர்தலையொட்டி மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 1,152 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதிகளும், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
52 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அவைகள் காவல்துறை மூலம் முழுமையாகக் கண்காணிக்கப்படும். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலை சிறப்பாக மேற்கொள்ள பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான வெங்கடேஷ்.
முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், விழிப்புணாóவு நிகழ்ச்சிகள் குறித்தும், வாக்குச்சாவடி நிலை அலுவலர் பயிற்சி வகுப்புகள் குறித்தும், தொகுதி வாரியாகக் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் த. மோகன்ராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலைச்செல்வி, வட்டாட்சியர் (தேர்தல்) ரெங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment