திருவாரூர் மாவட்டத்தில் ஜூன்.3-ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற வுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் வட்டத்தில் ஜூன்.3 முதல் 9-ம் தேதி வரை ஆட்சியர் எம். மதிவாணன்
தலைமையில், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஜூன்.3 முதல் 15-ம் தேதி வரை வரை
மாவட்ட வருவாய் அலுவலா் த. மோகன்ராஜ் தலைமையில், நன்னிலம் வட்டத்தில்
ஜூன்.3 முதல் 15-ம் தேதி வரை கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி தலைமையில்,
மன்னார்குடி வட்டத்தில் ஜூன்.3 முதல் 23-ம் தேதி வரை கோட்டாட்சியர்
செல்வசுரபி தலைமையில், நீடாமங்கலம் வட்டத்தில் ஜூன் 3 முதல் 14-ம் தேதி வரை
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி யினா் நல அலுவலா் தலைமையில்,
வலங்கைமான் வட்டத்தில் ஜூன் 3 முதல் 15-ம் தேதி வரை மாவட்ட வழங்கல் அலுவலா்
தலைமையில், குடவாசல் வட்டத்தில் ஜூன் 3 முதல் 21-ம் தேதி வரை உதவி ஆணையா்
(கலால்) தலைமையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
மேலும் அரசு விடுமுறை நாட்கள் (சனி, ஞாயிறு மற்றும்
திங்கள்கிழமை நீங்கலாக நாள்தோறும் காலை 9 மணிக்கு அந்தந்த இடத்தில்
ஜமாபந்தி தொடங்கப்படும். எனவே மக்கள் சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களில்
நேரில் சென்று தங்களது கோரிக்கை மனுவை அளித்து பயன்பெறலாம்.
No comments:
Post a Comment