Sunday, 1 May 2016

11 ஆயிரத்து 274 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் கலெக்டர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 274 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

சட்டமன்ற தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தால் திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு ஓனிட் பான்யாங், திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு துர்காதாஸ்கோஸ்வாமி ஆகியோர் மத்திய தேர்தல் பார்வையாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய தேர்தல் பார்வையாளர்கள் ஓனிட்பான்யாங், துர்காதாஸ்கோஸ்வாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மதிவாணன் 4 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பணிகள் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாதிரி வாக்குச்சாவடி

சட்டமன்ற தேர்தலையொட்டி மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திர பயிற்சியும், வாக்குச்சாவடி நடவடிக்கைகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சியும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் புகார்கள் குறித்த கண்காணிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பறக்கு படை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய துணை வாக்காளர் பட்டியலின்படி 11 ஆயிரத்து 274 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 9 லட்சத்து 70 ஆயிரத்து 413 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இ¢வ்வாறு அவர் கூறினார்.

புகார்

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சட்டமன்ற தொகுதி மத்திய தேர்தல் பார்வையாளர் ஒனிட் பான்யாங்கிடம் தெரிவிக்க 9443685729 என்ற செல்போன் எண்ணையும், திருவாரூர், நன்னிலம் சட்டமன்ற தொகுதி மத்திய தேர்தல் பார்வையாளர் துர்காதாஸ் கோஸ்வாமியிடம் தெரிவிக்க 9443685723 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

ஆய்வின்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன்ராஜ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment