Saturday, 14 May 2016

வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்


 வாக்குப் பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறைக்கு அருகிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திருவிக கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த மையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த போது மேலும் அவர் கூறியது:
மே 16-இல் வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்து வரப்படும். ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை மையம் திருவிக கல்லூரியில் வெவ்வேறு பகுதிகளில் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு பாதுகாப்பு அறையில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஒரு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட உள்ளன. மேலும் இந்த அறைகளுக்கு மிக அருகிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார் வெங்கடேஷ். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உ

No comments:

Post a Comment