Thursday 12 May 2016

தேர்தல் பணியில் கூடுதல் பறக்கும் படை அமைப்பு

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட கூடுதல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருத்துறைப்பூண்டி தொகுதியில் (தனி) 23, மன்னார்குடி தொகுதியில் 25, திருவாரூர் தொகுதியில் 25, நன்னிலம் தொகுதியில் 27 மண்டல அலுவலர்கள் என மொத்தம் 100 மண்டலங்கள் மே. 16-ம் தேதி நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 1 மண்டல அலுவலர், 1 உதவி மண்டல அலுவலர் மற்றும் 1 அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட்டு ள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் மே.11 முதல் 15-ம் தேதி வரை மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை கூடுதல் பறக்கும் படை அலுவலர்களாக செயல்பட ஆணையிட்டுள்ளது. அதன்படி 100 மண்டல அலுவலர்கள் மே 11 முதல் 15 வரை சுழற்சி முறையில் அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன மண்டலங்களில் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள்.
இவர்களுடன் காவல்துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்றுவார்கள். இக்கூடுதல் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை, வாக்காளர்கள் எந்த ஒரு அச்சமின்றியும், பணமோ, பொருளோ, தூண்டுதலோ இல்லாமல் வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பறக்கும் படையினருக்கு தனி வாகனம் மற்றும் தனி கைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களது பணி ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும். பொது மக்களிடமிருந்து வரும் புகார்களை இக்கூடுதல் பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்பட்டு அதன்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment