Friday 6 May 2016

9.70 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்: ஆட்சியர்


திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் 9.70 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி துண்டுச்சீட்டு வழங்கப்படும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ் தெரிவித்தார்.
2016 பேரவைத் தேர்தலுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் தயாராகி வருகின்றன. மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளிலும் 9 லட்சத்து 70 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரம், பகுதி எண், வாக்காளரின் எண், வாக்காளரின் புகைப்படம் மற்றும் விவரங்கள் அடங்கிய வாக்குச்சாவடி துண்டுச்சீட்டு (பூத் சிலிப்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவாரூரில், மாவட்ட ஆட்சியர் டி.என். வெங்கடேஷ் வாக்குச்சாவடி துண்டுச்சீட்டு வழங்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது: மாவட்டத்தில் 1,152 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 1,150 பணியாளர்கள் மூலம் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்படும் என்றார்.
அப்போது, மத்திய தேர்தல் பார்வையாளர் துர்காதாஸ் கோஸ்வாமி (பொது), திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் இரா. முத்துமீனாட்சி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜன்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து, 100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக, திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட மடப்புரம் சன்னதி தெருவில் வீடு வீடாகச் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தவிர, வீடுகளில் ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன

No comments:

Post a Comment