Wednesday 11 May 2016

நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி


தேர்தலில் ஜனநாயக முறைப்படி நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

உறுதிமொழி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தலில் ஜனநாயக முறைப்படி நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில், அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதேபோல் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள், கிராமப்புற மகளிர் சுயஉதவிக்குழுக்கள், கூட்டுறவு சங்கம், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், விவசாய சங்கங்கள், ஆலை தொழிலாளர்கள் என சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன்ராஜ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, அரசு மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், தாசில்தார் (தேர்தல்) ரெங்கசாமி மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment