Tuesday, 3 May 2016

திருவாரூர் மாவட்டம்:நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியீடு:களத்தில் 52 பேர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனர்.
திருவாரூர் தொகுதி: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்- மு.கருணாநிதி (திமுக- உதயசூரியன்), எம்.பத்மநாபன் (பகுஜன் சமாஜ்- யானை), ஏ.என். ஆர்.பன்னீர்செல்வம் (அஇஅதிமுக- இரட்டை இலை), பி.எஸ்.மாசிலாமணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- தானியக்கதிர்களும் அரிவாளும்), நா.ரெங்கதாஸ் (பாரதீய ஜனதா கட்சி - தாமரை).
பதிவு செய்யப்பட்ட கட்சிகள்- சு.கணேசன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - பானை), தென்றல் சந்திரசேகர் (நாம் தமிழர் கட்சி - மெழுகுவர்த்திகள்), ஆர்.சிவக்குமார் (பாமக- மாம்பழம்), எம்.சுபாஸ்பாபு (அன்பு உதயம் கட்சி - கண்ணாடி தம்ளர்).
சுயேச்சை வேட்பாளர்கள்- சா.சரவணன் (ஏழு கதிர்களுடன் கூடிய பேனை
முனை), டி.செல்வராஜ் (பலூன்), தே.தேவக்குமார் (புகைப்படக்கருவி),பன்னீர்செல்வம் (இரட்டை தொலை நோக்காடி), வீ.மீனாட்சிசுந்தரம் (வைரம்), எஸ்.ராஜேந்திரன் (கிரிக்கெட் மட்டை).
நன்னிலம் தொகுதி : அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்- ஆர்.காமராஜ் (அஇஅதிமுக - இரட்டை இலை), ஞா.சுந்தரமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்), எஸ்எம்பி. துரைவேலன் ( இந்திய தேசிய காங்கிரஸ் - கை), சா.முருகவேல் (பகுஜன் சமாஜ் கட்சி - யானை).
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் - செ.அன்புசெல்வம் (நாம் தமிழர் கட்சி - மெழுகுவர்த்தி
கள்), இ. இளவரசன் (பாமக - மாம்பழம்), ஆர்.சரவணன் (இந்திய ஜனநாயக கட்சி - கத்திரிகோல்), ஆர். விஜயன் ( மக்கள் மாநாடு கட்சி - வாளி).
சுயேச்சை வேட்பாளர்கள்:ரெ. செல்வராஜ் (மின்கலவிளக்கு), எஸ்.சேதுபதி (வளையல்கள்), பனசைஅரங்கன் (கணக்கீட்டுபொறி), கே.பெர்னாட்ஷா (வைரம்), ஜி.மோகன் (திராட்சை), வை.வெங்கடசுப்பிரமணியன் (வயலின்).
திருத்துறைத்துறைப்பூண்டி தொகுதி: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் - பி.ஆடலரசன் (திமுக - உதயசூரியன்), ஜி.உதயகுமார் (பாஜக - தாமரை), கே.உமாமகேஸ்வரி (அஇஅதிமுக- இரட்டை இலை), கே. உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - தானியக்கதிர்களும் அரிவாளும்).
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் - டி.அய்யப்பன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்- பானை), எஸ்.ராஜ்மோகன் (பாமக - மாம்பழம்), ஜெ.எஸ். சரவணக்குமார் ( நாம் தமிழர் கட்சி -மெழுவர்த்திகள்).
சுயேச்சை வேட்பாளர்கள்: யு.பசுபதி (பிரஷ்), ஆர்.புகழேந்தி (தபால்பெட்டி), ஆர்.முருகேசன் ( பைனாகுலர்ஸ்), ஆர். வீரபாண்டியன் (மிக்சி).
மன்னார்குடி தொகுதி: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்- எஸ். காமராஜ் (அஇஅதிமுக- இரட்டை இலை), பி.சிவக்குமார் (பாஜக - தாமரை), ஏ.முருகையன்பாபு (தேமுதிக -முரசு), டி.ஆர்.பி.ராஜா (திமுக - உதயசூரியன்).
பதிவு செய்யப்பட்ட கட்சிகள்- எஸ்.பாலசுப்பிரமணியன் (பாமக - மாம்பழம்), இ.பாலமுருகன் (நாம் தமிழர் கட்சி
- மெழுவர்த்திகள்), ஜேஆர்எஸ்.பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - பானை).
சுயேச்சை வேட்பாளர்கள்- ஆர்.சம்பத் (கேமரா), எம்.தவசு (காலிபிளவர்), ஏவிஎம்.மாரிமுத்து (கூடை), எஸ்.ராஜா (வைரம்), என்.ராஜீவ்காந்தி (பைனாகுலர்).
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 52 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

No comments:

Post a Comment