Monday 2 May 2016

53 கிராம் எடை உள்ளவை பெரிய வகை முட்டைகள் :என்இசிசி தகவல்


53 கிராம், அதற்கு மேல் எடை உள்ள முட்டைகள் பெரிய வகை முட்டைகள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் தினமும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. தற்போது, கோடை காலம் என்பதால், முட்டை விற்பனை குறைந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி வியாபாரிகள் முட்டையின் விலையைக் குறைத்து, பண்ணையாளர்களிடம் இருந்து வாங்கிச் செல்கின்றனர். 8 விதமான அளவுகளில் முட்டையைப் பிரித்து வாங்குகின்றனர். இதனால், பல பண்ணையாளர்களுக்கு முட்டை விற்பனையில் இழப்பு ஏற்படுகிறது.
இப்பிரச்னை குறித்து விவாதிக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணயக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.செல்வராஜ் கூறியது:
நாமக்கல் கோழிப் பண்ணைகளில் உற்பத்தியாகும் 53 கிராம், அதற்கு மேல் எடை உள்ள முட்டைகள் பெரிய வகை முட்டைகளாகும். மே 1-ஆம் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலைக்கே இம் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும்.
49 முதல் 52 கிராம் எடை உள்ள முட்டைகளை 10 காசுகள் வரை குறைத்து விற்பனை செய்யலாம். 45 கிராம் முதல் 48 கிராம் எடை உள்ள முட்டைகளை பெரிய முட்டை விலையை விட 20 காசுகள் குறைவாக விற்பனை செய்யலாம். 40 முதல் 44 கிராம் வரை எடை உள்ள முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலையில் இருந்து 30 காசுகள் வரை குறைத்து விற்பனை செய்யலாம். இதற்குக் குறைவாக பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment