Wednesday, 1 April 2015

கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்ட அனுமதி பெறுவது அவசியம் கலெக்டர் மதிவாணன் அறிவுறுத்தல்















 கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்ட அனுமதி பெறுவது அவசியம் என கலெக்டர் மதிவாணன் அறிவுறுத்தி உள்ளார்.

ஆழ்குழாய் கிணறு

திருவாரூர் மாவட்ட கலெக் டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்ட கிரா மங்களில் விவசாயம், தொழிற் சாலை ஆகியவற்றிற்காக புதிய ஆழ்குழாய் கிணறுகளை தோண்டுவது, ஏற்கனவே உள்ள கிணறுகளை ஆழப் படுத்துவது மற்றும் புன ரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சியில் அனுமதி பெறு வது அவசியம் ஆகும். இதற்கு ரூ.5 ஆயிரத்திற்கு வங்கி வரை வோலை எடுத்து, விண்ணப் பத்துடன் ஊராட்சி செயல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவு சான்று

திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவதற்கு விருப் பம் உள்ளவர்கள் பதிவு சான்று பெறுவது அவசியம் ஆகும். இதற்கான பதிவு கட்டணம் ரூ.15 ஆயிரத்தை வங்கி வரைவோலை மூலமாக செலுத்தி, உரிய விண் ணப்பத்தை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கலெக்டர் கூறி உள் ளார்.

No comments:

Post a Comment