Thursday 9 April 2015

பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் அனிபா காலமானார்
















































பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் அனிபா சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96.

நாகூர் அனிபா


தி.மு.க. பிரமுகரும், பிரபல இஸ்லாமிய பாடகருமான நாகூர் அனிபா, சென்னை கோட்டூர்புரம் 3–வது மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு வயது 96. வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் நாகூர் அனிபா தனது வீட்டிலேயே காலமானார். அவரது மறைவை தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான தி.மு.க.வினரும், இஸ்லாமியர்களும் நேற்று இரவு அங்கு திரண்டனர்.

11 வயதில் பாடத் தொடங்கினார்


தனது 11–வது வயதில் பாடத் தொடங்கிய நாகூர் அனிபா, இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளில் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒரியா திரைப்படங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.


‘‘இறைவனிடம் கையேந்துங்கள். அவர் இல்லை என்று சொல்வதில்லை’’ என்ற பாடல் நாகூர் அனிபாவின் முக்கியமான பாடல்களில் ஒன்றாகும். ஆரம்ப காலம் முதல் தி.மு.க.வில் இருந்த அவர், 1957–ம் ஆண்டு நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தி.மு.க. சார்பில் நடந்த போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்.
தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ள நாகூர் அனிபா, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் இருந்திருக்கிறார்.

No comments:

Post a Comment