Tuesday 28 April 2015

கை மணிக்கட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை திருவாரூர் மருத்துவ கல்லூரி டாக்டர்கள் சாதனை























கை மணிக்கட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து திருவாரூர் மருத்துவ கல்லூரி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

கை மணிக்கட்டில் புற்றுநோய்

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் உச்சி மேடு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி தேவிகா (வயது24). இவருடைய கை மணிக்கட்டில் கட்டி வளர்ந்து இருந்தது. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த தேவிகா, கடந்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி திருவாரூரில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமிற்கு வந்து இருந்தார்.

முகாமில் அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணிக் கட்டில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என டாக் டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தேவிகாவுக்கு தேவைப்படும் சிறப்பு சிகிச்சையை அளிக்கு மாறு திருவாரூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தை அறிவுறுத்தி னார்.

அதன்படி கடந்த 11-ந் தேதி திருவாரூர் மருத்துவ கல்லூரி யில் சிறப்பு மருத்துவ குழுவி னர் தேவிகாவை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவருக்கு கை எலும்பில் புற்றுநோய் இருப்பதும், அதன் காரணமாக கட்டி வளர்ந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட் டது.

அறுவை சிகிச்சை

இதை தொடர்ந்து மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் மேற்பார்வையில், டாக்டர்கள் அப்துல் அமீது அன்சாரி தலைமையில், டாக்டர்கள் கோகுல்நாத், அக்னிராஜ், குமரன், லெனின் ஆகியோரை கொண்ட மருத் துவ குழுவினர் தேவிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் பாதிப்புக்கு உள் ளான கை மணிக்கட்டில் இருந்த எலும்பு பகுதியை அகற்றினர். இதையடுத்து காலில் இருந்து வேறொரு எலும்பை எடுத்து தேவிகாவின் கை மணிக்கட்டு பகுதியில் பொருத்தினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தேவிகா குணம் அடைந்தார். அவரை நேற்று மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

No comments:

Post a Comment